சினிமா
தனுஷின் ‘மாறன்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு….!
தனுஷ் நடிப்பில் , கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘மாறன்’. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு, மாறன் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் தனுஷ் கையில் பேனாவுடன் நிற்கும் காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது.