விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது. 18 போட்டியாளர்கள் உடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், 2 போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்து, இப்போது ஒருவர் தான் டைட்டில் வின்னர் என்று நிறையவடையப் போகிறது.
வழக்கமாக லைவ்வாக ஒளிபரப்பாகும் ஃபினாலே நிகழ்ச்சி, இந்த முறை ஒரு நாள் முன்னதாகவே படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ராஜூ என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லை, ராஜூ பிக் பாஸ் வின்னர் ட்ரோபியுடன் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் கசிந்தது. இதனால் ராஜூவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே போல் இரண்டாவது இடம் விஜய் டிவி ஆங்கர் பிரியங்காவுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.