
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
“அதிமுக ஆட்சியில் தற்காலிகமாக துவங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டன. கடந்த ஆட்சியில் ஓராண்டுக்காக இந்த கிளினிக்குகள் திறக்கப்பட்டன.
செவிலியர்கள் இல்லாமல் இயங்கி வந்த அம்மா கிளினிக்குகளில் 1,820 மருத்துவர்கள் மட்டுமே இருந்து வந்துள்ளனர். தற்போது அந்த மருத்துவர்களுக்கு மார்ச் வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டு வருவதாக சென்னை பெரியார் திடலில் கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவம் மையம் திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன கூறினார்.