வாழ்க்கைமுறை

கண்ணை சுற்றி கருவளையம் போக இதை செய்தால் போதும்

கண்ணிற்கு கீழே தெரியும் கருவளையம் கூட இதே தான் அதாவது, உடல் சோர்வு , மன உளைச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் இருந்தால் கருவளையம் வரும்

முகம் தான் உடல் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பாக இருக்கும். உடலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் உடனே முகத்தில் தெரிய ஆரம்பிக்கும். கண்ணிற்கு கீழே தெரியும் கருவளையம் கூட இதே தான் அதாவது, உடல் சோர்வு , மன  உளைச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் இருந்தால் கருவளையம் வரும். இதற்கு அதிக அளவில் செலவு செய்து கிரீம்  பயன்படுத்த வேண்டாம். வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்தி இதை செய்தால் போதுமானது.

சில வீட்டு வைத்திய முறைகள் இங்கே

  • தினமும் 6 – 8 மணி நேரம் தூக்கம் அவசியம். தூக்கத்தை எதற்காகவும் சமரசம் செய்ய வேண்டாம். போதுமான அளவு தூக்கம் இருந்தாலே இது போதும் . கருவளையம் நாளடைவில் மறைந்து போகும்.

  • மனதை ஓய்வாக வைத்து கொள்ள வேண்டும் இது மிகவும் அவசியம். மனதை நீங்கள் ரிலாக்ஸாக வைத்து கொள்ள இது போன்ற கருவளையம் காணாமல் போகும்.
  • ஐஸ் ஒத்தடம் – ஐஸ் கட்டிகளை எடுத்து ஒரு துணியில் மடித்து கண்ணிற்கு ஒத்தடம் கொடுப்பது மிகவும் நன்மை அளிக்கும். கருவளையம் மற்றும் கண்ணிற்கு கீழே வீக்கம் இருந்தால் அதையும் இந்த ஐஸ் கட்டிகள் குறைக்கும்.
  • டீ பேக் – டீ பேக் 20 நிமிடம் சூடு தண்ணீரில் போட்டு வைத்து விட்டு, பின்னர் அதை எடுத்து பிரிஃட்ஜில் 20 நிமிடங்கள் வைக்க வேண்டும். பின்னர் அதை எடுத்து கண்களுக்கு வைக்கவும்.டீயில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடெங்கள் கண்களுக்கு ஓய்வை தரும்.
  • வெள்ளரிக்காய் – வெள்ளரிக்காய்யாய் வட்டமாக நறுக்கி கண்கள் மேலே வைத்து 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இது கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது. அதனால், கருவளையம், கண் எரிச்சல் போன்றவை குணமாகும்.

  • கற்றாழை – முகத்திற்கு தினம் காற்றாலை தடவலாம். இது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீக்கும். . மேலும், கண்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். காற்றாலை இயற்கையாகவே குளிர்ச்சியான தன்மை கொண்டுள்ளது. இது மிகவும் நன்மை பயக்கும். கற்றாழை வெளிபுறக்கமாவும் பயன்படுத்தலாம். காற்றாலை ஜெல் எடுத்து சுத்தம் செய்து சாப்பிடவும் செய்யலாம். இது குடலை சுத்த படுத்தவும்,உடல் குளிர்ச்சிக்கு நல்லது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button