உடைந்த எலும்பை கூட ஒட்ட வைக்கும் மூலிகை……!

மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகித்த மூலிகை அருகாம்பச்சை என்றும், சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் அருவதா செடி. இதன் பூர்வீகம் மேலை நாடு என்று சொல்லப்பட்டாலும் நம்மூரு காடுகளில் இது வேகமாக வளர்ந்து வருகிறது . அடர்ந்த காடுகளில் மற்றும் மலைகளில் இயற்கையாக உள்ள இந்தச் செடி மூன்றடி உயரம் மட்டுமே வளரும். இதன் இலைகள் முருங்கை இலைகள் போல, சின்னதாக தண்டுகளில் இணைந்து காணப்படும். இந்த செடியில் மஞ்சள் நிறத்தில் பூவும் பூக்கும். இவை வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடவை.
இந்த மூலிகை செடி இருக்கும் இடத்தில் ஈக்கள் மொய்க்காது. இந்த செடி நாய், பூனைகளுக்கும் ஆகாது.
இந்த இலைக்கு எலும்பு முறிவு பாதிப்புகளை குணமாக்கும் ஆற்றல் உண்டு. முதுகு தண்டு பாதிப்பை குணமாக்கும். முதுகுத்தண்டுவட வலி மற்றும் முதுகு வலி பாதிப்புகளையும் இது குணமாக்கும். சிறுநீர் கழிக்கும் போது வரும் எரிச்சலைப் போக்கும். சிறுநீர்த்தாரை அடைப்பை சரியாக்கும். கருப்பை பாதிப்புகளையும் அகற்றும். இந்த இலைகளுக்கு மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மையும் உண்டு. மன அழுத்தத்தினால் உருவாகும் நரம்பு பாதிப்புகளை குணப்படுத்தி இரத்தத்தை தூய்மைப்படுத்தி வயிற்றுப் புழுக்கள அழிக்கும்.
பெண்களுக்கு மாதவிலக்கில் ஏற்படும் இரத்தப் போக்கு பாதிப்புகளை சரி செய்யும். உடல் சூட்டை போக்கும். மூலவியாதி, உடல் அணுக்களை பாதிக்கும் புற்றுவியாதி ஆகியவற்றையும் சரி செய்யும்.சுவாச பாதிப்பை போக்கும்.
இந்த இலைகளை பூண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, கீரையைப் போல் கடைந்து உணவில் சேர்த்து சாப்பிடலாம்.
இந்த இலையை நிழலில் உலர்த்தி இடித்துப் பொடியாக்கி , அதிமதுரப்பொடி, சதகுப்பை, கருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, இதையெல்லா பொடியாக்கி அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, அதில் சிறிதளவு எடுத்து அத்துடன் பணங்கற்கண்டு சேர்த்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.
இந்த இலைகளை சிறிதுஎடுத்து, நன்கு அரைத்து அத்துடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மன அழுத்த பாதிப்புகள் விலகி, மனநிலை இயல்பாகும்.
பக்கவாத பாதிப்பால் பலரும் வீட்டுக்குள் முடங்கிப் போய் இருப்பார்கள். இவர்கள் சதாப்பிலைகளை நன்றாக அரைத்து உடலில் வாத பாதிப்பு உள்ள இடங்களில் மேலே தடவினால் சிறிது, சிறிதாக பாதிப்புகள் அகலும்.
இந்த இலைகளை நீரில் கொதிக்க வைத்து தினசரி இரண்டு அல்லது மூன்று வேளை பருகினால் மூட்டுவலி சரியாகும். குடல் புழு அழியும். இரத்த நாள அடைப்புகள் போக்கிவிடும்.
ஞாபசக்தியை அதிகரிப்பது, கண் வீக்கம், வலியை போக்குவது என இதன் பயன்கள் இன்னும் அதிகம்.